கண்களில் ரத்தம்! வீங்கிய முகம்! காவல் நிலையத்தில் கதறிய பிரபல டிவி நடிகை! அதிர வைக்கும் காரணம்!

மும்பை: சீரியல் நடிகை நளினி நேகி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.


நடிகை நளினி, பிரீத்தி என்பவருடன் தனியாக ரூம் எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில், பிரீத்தி தனியாகப் பிரிந்து சென்றுவிட்டாராம். ஆனால், திடீரென சில நாள் முன்பாக நளினி அறையின் கதவை தட்டி பிரீத்தி சில நாட்கள் தங்குவதற்கு அனுமதி தரும்படி கெஞ்சியுள்ளார்.

வேறு வழியின்றி, அவரை அறையின் உள்ளே அனுமதித்துள்ளார். அப்போது, பிரீத்தியும், அவரது தாயும் திடீரென உள்ளே நுழைந்து, நளினியை தாறுமாறாக அடித்து, உதைத்துள்ளனர்.  

இதன்பேரில், புகைப்பட ஆதாரங்களுடன் அவர் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். அவர்களும் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.