வெளிநாட்டு மாப்பிள்ளை..! நம்பிச் சென்ற சன் டிவி தொகுப்பாளினிக்கு அமெரிக்காவில் கிடைத்த அதிர்ச்சி அனுபவம்!

வசதியாக வாழலாம் என கணவரை நம்பி அமெரிக்காவிற்கு சென்ற தமிழ் நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


பிரபல சீரிய நடிகையும், டான்சருமான ஐஸ்வர்யா, சன்டிவியில் சந்திரலேகா சீரியலில் நடித்து புகழ்பெற்றவர். சன்சிங்கர், மற்றம் விஜய் டிவி ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தவர் ஐஸ்வர்யா. 

இந்நிலையில் திடீரென திருமணம் முடிந்து அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார் ஐஸ்வர்யா. அவரைப்பற்றிய தகவல்கள் ஏதும் இல்லாத நிலையில் சமூக வலைதளங்களில் மட்டும் காட்சி தந்து வந்தார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார். தான் சிறு வயதில் இருந்தே ஒரு சுப்பி பெண் என்றும் 16 வயதில் தொகுப்பாளினியாக மாறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 24வது வயதில் வீட்டில் பார்த்தவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்று விட்டதாகவும், ஆனால் அவருடைய பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்தாகவும் வேதனை தெரிவித்துள்ளர் ஐஸ்வர்யா.

அவருடைய பணத்தை அவருடைய உறவினர்களே ஏமாற்றி வாங்கிக் கொண்டதாகவும் அவரது வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் வைத்திருக்கவில்லை எனவும் ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளர். திருமணம் முடிந்து தேனிலவு கொண்டாடலாம் என்று ஆசையோடு சென்ற தனக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இதை குறையாக எடுத்துக்கொள்ளாமல் கணவருடன் சேர்ந்து உழைத்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக வருமானம் வர கடன் தொல்லையில் இருந்து மீண்டு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐஸ்வர்யா தற்போது இருவரும் சந்தோஷமாக இருப்பதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கணவருக்கு பிரச்சனை என்றால் மற்றவர்களிடம் குறை சொல்லியே மன உளைச்சல் தரும் மனைவிகளுக்கு மத்தியில் ஐஸ்வர்யா போன்றவர்கள் இருந்தால் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டால், பூமியிலும் திருமண வாழ்க்கை சொர்க்கத்தில் இருக்கும்.