உடல் முழுவதும் ரத்த காயம்! சிதைந்த சடலம்! நடிகர் தீபக்கின் தந்தைக்கு நேர்ந்த பயங்கரம்!

சென்னையில் சினிமா, டிவி நடிகரும், தொகுப்பாளருமான தீபக் தந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது உடலில் ரத்த காயங்கள் உள்ளதால் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது.


தற்போது தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் சீரியல்களிலும் நடித்து வரும் தீபக் முன்னதாக தகதிமிதா, முன்தினம் பார்த்தேனே, இவனுக்கு தண்ணில கண்டம் போன்ற திரைப்படங்களில் நடித்தவர். திருமதி செல்வம், தென்றல் உள்ளிட்ட சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் பிரபலம் அடைந்தவர் தீபக்.

தீபக் சென்னை அரும்பாக்கத்திலும் அவரது தந்தை தினகர், தாய் விருகம்பாக்கத்திலும் வசித்து வந்தனர். தீபக்கின் தந்தை தினகரின் மனைவி கடந்த 26 ம்தேதி கும்பகோணத்திற்கு உறவினர்களை பார்க்க சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த விட்டர் தினகர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். பிரபல நடிகரின் தந்தை ஒருவர் வீட்டில் ரத்தக் காயத்துடன் மீட்கப்பட்டள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.