உங்க அப்பா இறந்துட்டாருடா..! செல்போனில் வந்த பகீர் தகவல்..! பிறகு கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு..! அதிர வைக்கும் தகவல்!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தந்தை இறந்து விட்டதாக தகவல் வர வேதனையில் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.


தூத்துக்குடி ஆறுமுகனேரியை சேர்ந்த பொன்ராஜ் என்பவர் மதுரை அண்ணா பல்கலைகழகத்தில் விடுதியில் தங்கி முதலாமாண்டு எம்.பி.ஏ படித்து வந்துள்ளார். கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் சொந்த ஊருக்கு புறப்பட தன்னுடைய உடமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது பொன்ராஜின் உறவினர் ஒருவர் அவருக்கு போன் செய்து பொன்ராஜின் தந்தை மோகன் மாரடைப்பால் திடீரென இறந்து விட்டதாக தகவல் அளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்தார் பொன்ராஜ். விடுமுறையில் தந்தையை பார்க்கப்போகிறோம் என்ற ஆசை ஆசையாய் இருந்த பொன்ராஜூக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது.

இதையடுத்து மன வேதனைக்குள்ளான பொன்ராஜ் விடுதியில் இருந்து மற்ற மாணவர்கள் ஊருக்கு புறப்பட்டு சென்றதும், விடுதி அறையில் கத்தியால் கை மற்றும் கழுத்தில் அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்த முயற்சி தோல்வி அடைந்ததால் அங்கிருந்த கயிற்றைக் கொண்டு தூக்கிட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உண்மையிலேயே மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.