திருமணமாகி ஒரே மாதத்தில் ஒரு கையை இழந்த இளம் பெண்! மாவு மில் பணியில் விபரீதம்! உதவ ஆள் இல்லாமல் ஒரு வருடமாக தவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவுமில் எந்திரத்தில் ஒரு கையை இழந்த பெண் தொழிலாளி செயற்கை கை பொருத்த நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் கெச்சிலியாபுரம் கிராமத்தில் செல்வராஜ் மகேஸ்வரி தம்பதி வாழ்ந்து வருகின்றனர். திருமணமாகி ஒரே மாதத்தில் மகேஸ்வரி அருகில் உள்ள அனுகிரகா மாவுமில் ஆலையில் பணியில் சேர்ந்தார். ஒரு ஆண்டுக்கு முன் எதிர்பாராத விதமாக மாவு மில் இயந்திரத்தில் சிக்கி கொண்டது. 

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகேஸ்வரி ஒரு கையை இழக்கும் நிலை ஏற்பட்டது. மாவு மில் இயந்திரத்தில் சிக்கி கையை இழந்த மகேஸ்வரி நிவாரணம் கேட்டு ஆலை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் ஒரு கை இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார் மகேஸ்வரி 

கடந்த 7 மாதங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிக்கான நிதி உதவி கேட்டு விண்ணப்பம் செய்த மகேஸ்வரிக்கு இன்னும் உதவி கிடைத்தபாடில்லை ஏற்கனவே ஏழ்மை நிலையில் இருக்கும் மகேஸ்வரி குறைந்தபட்சம் செயற்கை கை பொருத்த நிதி வழங்கினால் தன்னுடைய வாழ்க்கையைத் தானே பார்த்துக் கொள்வேன் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் மகேஸ்வரி 

ஆலை நிர்வாகம் தனக்கு உரிய இழப்பீடு தர முன்வரவேண்டும் என்றும் தமிழக அரசும் மாற்றுத்திறனாளிக்கான நிதி வழங்கி தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என மகேஸ்வரி வேதனையுடன் தெரிவிக்கிறார் 

கையை இழந்து ஒரு ஆண்டாக அவதிப்பட்டு வரும் மகேஸ்வரிக்கு சமூக ஆர்வலர்களும் தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனமும் கொஞ்சம் உதவி செய்தால் அவருடைய வாழ்க்கைக்கு வெளிச்சம் கிடைக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை .