வாய் பேச முடியாது! வெறும் சைகை தான்! சந்தித்த சில நிமிடங்களிலேயே கணவன் மனைவி ஆன மாற்றுத் திறனாளிகள்! இது தான் உண்மை காதல்!

திருமண விழாவில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் இருவர் சந்தித்த போது, ஒருவருக்கொருவர் பிடித்து விட்டதால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிராமத்தில் நடந்த திருமண விழாவில், அதே ஊரைச் சேர்ந்த வாய் பேச முடியாத ராமராஜன் என்பவரும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவி என்ற வாய் பேச முடியாத பெண்ணும் கலந்து கொண்டனர்.  

அப்போது ஒருவருக்கு ஒருவர் எதார்த்தமாக சந்தித்துக் கொண்டனர். இருவரும் சைகையில் பேசிக்கொண்டபோது, ஒருவருக்கொருவர் மிகவும் பிடித்து விட்டதால் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.  

இந்த விஷயம் அறிந்த இருவரின் வீட்டாரும் இவர்களின் இந்த முடிவிற்கு சம்மதம் தெரிவித்ததால், திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும் இவர்களின் திருமணம் கறம்பக்குடி முருகன் கோவில் சன்னிதானத்தில் நடைபெற்று முடிந்தது.  

இந்த திருமணத்திற்கு வந்த உறவினர்கள் சிலர் இவர்களின் திருமணம் நிச்சயம் சொர்கத்தில் தான் நிச்சயிக்கப்பட்டு இருக்கும் என வாழ்த்தி விட்டுச் சென்றது நெகிழச்செய்தது.