அமெரிக்க தேர்தலில் துளசி..! தெறிக்கவிடும் நம்ம ஊர் ஆர்.எஸ்.எஸ்.!

அடுத்த 2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக களமிறங்கப் போவதாக அறிவித்திருக்கிறார் துளசி கப்பார்டு என்கிற அமெரிக்கப் பெண்.


துளசி இந்து மதத்தை பின்பற்றுகிறார்,தன்னை ஒரு 'கர்ம யோகி' என்று அழைத்துக் கொள்கிறார்,இவளவு போதாதா,அமெரிக்க ஆர்.எஸ்.எஸ் அவரை தத்தெடுத்துக் கொண்டு விட்டது.அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ்சின் முகத்துக்கு ஹெச்.எஸ்.எஸ் என்று பெயர்.ஹிண்டு சுயம் சேவக் சங்!. அமெரிக்காவின் ஒரு மாநில அந்தஸ்தை பெற்றிருக்கும் ஹவாய்தீவில் பிறந்த துளசி,ஹவாயின் செனட்டராக தேர்ந்தெடுக்க பட்டவர்.ஹவாய் பாதுகாப்பு படையில் மேஜர் அந்தஸ்த்தில் பணியாற்றியவர்.

இப்போது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்  தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தது களமிறங்கி இருக்கிறார்.துளசி என்கிற பெயரும் கர்மயோகி என்ற சுய அறிவிப்பும் தவிர அவருக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் அமெரிக்க சங்கிகள் அவர் பின்னால் அணிவகுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அமெரிக்க மக்கள் தொகையில் இந்துக்கள் .7 சதவீதம் தான்.ஓட்டு என்கிற வகையில் இவர்கள் மிகச்சிறிய  மைனாரிட்டிதான். ஆனால், சம்பாத்தியத்தில் இவர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள்.இந்த இந்தியர்களில் 70% பேர் வருடத்துக்கு 5 லட்சம் முதல் 7 லட்சம் அமெரிக்க டாலர்கள் சம்பாதிக்கிறார்கள்.அதாவது நம்ம ஊர் காசில் மூன்றரை கோடி முதல் ஐந்து கோடி வரை சம்பாதிப்பவர்கள்.அதனால் இவர்களின் ஆதரவு முக்கியத்துவம் பெறுகிறது.

எல்லா நாடுகளையும் போலவே அமெரிக்காவிலும் தேர்தலில் பணம் முக்கிய இடம் வகிக்கிறது. அமெரிக்கா உட்பட 37 நாடுகளில் தனது கிளைகளைக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ் துளசியை ஆதரிப்பது ட்ரம்ப்பையே ஆட்டம் கான வைத்திருக்கிறது.சமீபத்தில் அல்- கொய்தாவுக்கு ஆதரவாக ட்ரம்ப் செயல் படுகிறார் என்கிற துளசியின் குற்றச் சாட்டை சீரியசாக எடுத்துக் கொண்டு ட்ரம்ப் பேசி இருப்பதே அவரது அஸ்த்திவாரத்தை 37 வயது துளசி அசைத்து விட்டதாகவே அமெரிக்காவில் பார்க்கப் படுகிறது.

ஆகவே அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிற அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தியர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. சென்னை மைலாப்பூர் வாசியான கமலா ஹாரீஸ் என்கிற இன்னொரு ஜனாதிபதி வேட்பாளரும் களத்தில் இருப்பதால் வருகிற 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ,இந்திய தேர்தல் அளவுக்கே முக்கியத்துவம் பெறப் போகிறது.

சென்னை வாசியான கமலா ஹாரிசா,ஹானலூலுவில் பிறந்த அமெரிக்க இந்துவா என்பது அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய கேள்வியாக இருக்கும் என்று தெரிகிறது.நான் கறுப்பினத்தவர் என்று சொல்லும் சென்னைப் பெண் கமலாவா,தான் கர்மயோகி என்று சொல்லும் அமெரிக்க வெள்ளை இந்து துளசியா என்பதே வரும் 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முக்கிய முடிவாக இருக்கும்.