பால்வினை நோயை மறைத்து 14 வயது மாணவனுடன் உறவு! பெற்ற பிள்ளைகளிடம் சிக்கிய 45 வயது ஆசிரியை!

தன்னிடம் பாடம் படிக்க வந்த 14 வயது சிறுவனிடம் பாலியல் உறவு வைத்துக் கொண்டிருந்த டீச்சரை சொந்த பிள்ளைகளே கையும் களவுமாக பிடித்து அசிங்கமாக கேள்விகளை கேட்ட அருவருக்கத்தக்க சம்பவம் அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாகாணத்தில் நடைபெற்றுள்ளது.


நியூஜெர்ஸியில் எலிஸ் காஸ்டிலோ என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னிடம் பாடம் கற்க வந்த 14 வயது சிறுவனிடம் கடந்த ஒன்றரை வருடங்களாக ஆசை வார்த்தைகள் காட்டி தகாத முறையில் உறவு வைத்துக் கொண்டுள்ளார். 

எலிஸ் க்கு இரு பிள்ளைகள் இருக்கின்றனர். தாயின் இந்த தகாத செயலை பொறுத்துக் கொள்ள முடியாமல் அசிங்கமாக கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த எலிஸ் பிள்ளைகளை அடிக்கும் அளவிற்கு சென்றுள்ளார். குழந்தைகளின் தந்தை உடனடியாக அருகில் உள்ள சிறுவர் பாதுகாப்பு மையத்திற்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்ததையடுத்து அதிகாரிகள் எலிசை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

சிறுவனிடமும் எலிசிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றன. இதில் சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்தது, தகாத முறையில் வழிகாட்டியது ஆகியவற்றின் அடிப்படையில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் விசாரணையில் எலீஸ்க்கு பால்வினை நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதையும் மறைத்து தகாத உறவில் ஈடுபட்டதற்கும் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் சுமார் 15 முதல் 20 ஆண்டுகாலம் வரை எலிஸ்க்கு சிறை தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது.