எடப்பாடியிடம் சரண்டரான டிடிவி எம்எல்ஏ! தமிழக அரசியலில் புதிய திருப்பம்!

டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்த எம்எல்ஏ ஒருவர் மீண்டும் எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம் ஆகியுள்ளார்.


டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆக அறந்தாங்கி இரத்தின சபாபதி, விருதாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இவர்களில் கள்ளக்குறிச்சி பிரபு ஏற்கனவே எடப்பாடி அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் வாக்களிக்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார். இந்த நிலையில் அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி தொடர்ந்து அமைதி காத்து வருகிறார். ஆனால் விருதாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன் தான் எப்போதும் அதிமுக உறுப்பினர் என்றும் இரட்டை இலை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் தான்தான் என்றும் கூறி தினகரனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை விருதாச்சலம் கலைச்செல்வனும் அறந்தாங்கி ரத்தினசபாபதி டிடிவி தினகரனின் தீவிரமான ஆதரவாளர்களாக இருந்தனர். சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரும்போதுதான் தங்கள் நிலைப்பாட்டை கூறுவோம் என்று பூடகமாக பேசி வந்தனர். ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி தினகரன் கட்சி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து விருதாச்சலம் கலைச்செல்வன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகி எடப்பாடி ஆதரவு நிலைப்பாட்டை அவர் எடுத்துள்ளார்.

விரைவில் எடப்பாடி பழனிசாமி சந்தித்து அதிமுக உறுப்பினர் ஆக தொடர விருதாச்சலம் கலைச்செல்வன் முடிவெடுத்துள்ளார். ஏற்கனவே பிரபு ஆதரவாளர் வரிசையில் இருந்து சென்றுவிட்ட நிலையில் விருதாச்சலம் கலைச்செல்வனும் புறப்பட்டு விட்டதால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அவருடன் சேர்த்து இரண்டாக குறைந்துள்ளது.