உள்ளாட்சித் தேர்தலுக்கு டி.டி.வி.தினகரன் ரெடி! சசிகலா பச்சைக்கொடி!

கிளியை வளர்த்து பூனையிடம் கொடுப்பது என்று கிராமத்தில் பேசுவார்கள் அப்படித்தான் சசிகலா சிறைக்குப் போகும்போது, அ.தி.மு.க. கட்சியையும், ஆட்சியையும் தினகரனை நம்பி ஒப்படைத்துவிட்டுப் போனார்.


அவர் சிறைக்குப்போன கொஞ்சநாளில் ஆட்சியும் போச்சு, கட்சியும் போச்சு. ஆர்.கே.நகரில் ஜெயித்ததை மட்டும் கணக்குப் போட்டு, நானே ராஜா நானே மந்திரி என்று அ.ம.மு.க. கட்சியை ஆரம்பித்தார். 

நிலவரம் கலவரம் ஆவதை அறிந்து அவருடன் இருந்த அத்தனை பேரும் ஓட்டம் பிடித்துவிட்டார்கள். மிச்சநபர்களுடன் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் நின்று, அவர் மீது இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையையும் கெடுத்துக்கொண்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதா வேண்டாமா என்று ஆலோசனை செய்யப்பட்டது. ஏனென்றால், பொது சின்னம் கிடைக்கும் வரையில் தேர்தல் போட்டியில் பங்கெடுப்பதில்லை என்று அறிவித்து இருந்தார் தினகரன்.

இதை அறிந்ததும் தினகரனுடன் இருந்து கொஞ்சநஞ்ச பேரும் அ.தி.மு.க.வுக்கு மூட்டை கட்டிவிட்டனர். அதனால் அதிர்ச்சி அடைந்து சசிகலாவை பெங்களூரில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் நிற்கப்போவதாகவும், செலவழிக்க பணம் ரெடி என்றும் அறிவித்துவிடு. அதுதான் உன்னுடன் இருப்பவர்களை இழக்காமல் இருப்பதற்கு ஒரே வழி என்று சசிகலா ஆலோசனை சொன்னாராம். அதைக் கேட்டு, உள்ளாட்சிக்குத் தயாராக தன்னுடைய படைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் தினகரன்.

ஆனால், படையைத்தான் காணோம்.