தினகரனின் திருவேற்காடு மாமா! ஸ்டாலினின் குறிஞ்சிமலர் நடிகை! அறிக்கை போரில் வெளியான அந்தரங்கம்!

திருவாரூர் தேர்தல் நிறுத்தப்பட வேண்டும் என்று ஸ்டாலின் அறிக்கை கொடுத்தது முதல் தினகரனுக்கும் ஸ்டாலினுக்கும் எக்குத்தப்பாக மோதல் நடந்துவருகிறது. இதனை வேடிக்கை பார்க்கும் தி.மு.க. புள்ளிகளும் எதிர்க்கட்சிகளும் வாயைப் பொத்திக்கொண்டு சிரிக்கிறார்கள்.


திருவாரூர் தொகுதியில் கருணாநிதி 60 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் அதிகம் பெற்று வெற்றி அடைந்தார். அந்தத் தொகுதியில் தேர்தல் நடந்தால் எளிதாக தி.மு.க. வென்றுவிடும் என்பதுதான் நிலைமை. ஆனால், அந்தத் தேர்தல் நடக்கக்கூடாது என்று ஸ்டாலின் பயந்தார். ஏனென்றால் தினகரன் ஏதேனும் தில்லுமுல்லு செய்து ஆர்.கே.நகர் போன்று அவமானப்படுத்திவிடுவார் என்று நினைத்தார்.

இதையேதான் எடப்பாடி பழனிச்சாமியும் நினைத்தார். 30 மந்திரிகளையும் களத்தில் இறக்கினாலும் தினகரன் ஏதாவது எசகுபிசகு வேலை செய்துவிடுவார். ஏனென்றால் கஜா புயல் நேரத்திலேயே திருவாரூர் தொகுதியை நன்றாக சுற்றிவந்துவிட்டார். மேலும் திருவாரூர் தொகுதியில் அலுவலகம் போட்டால் பிரச்னை வரும் என்று தெரிந்து, தஞ்சாவூரில அலுவலகம் போட்டு வாக்குச்சாவடிகளை குறிவைத்து காய் நகர்த்திவந்தார்

இதையெல்லாம் பார்த்துத்தான் எடப்பாடியும் ஸ்டாலினும் பதறிப்போனார்கள். தி.மு.க.வுக்கு தலைவராக வந்தபிறகு சந்திக்கும் முதல் தேர்தலில் தோற்றுப்போனால், அதுவும் கருணாநிதி அதிக வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தொகுதியில் தோற்றுப்போனால் எல்லோரும் கைகொட்டி சிரிப்பார்கள் என்று பயந்தார். செல்வி அல்லது டி.ஆர்.பாலுக்கு சீட் கொடுத்தால் கண்டிப்பாக ஜெயித்துவிடுவார்கள். ஆனால், அவர்களுக்கு மரியாதை கொடுக்கக்கூடாது என்பதிலும் ஸ்டாலின் உறுதியாக இருந்தார்.

இந்த நேரத்தில்தான் தேர்தல் தள்ளிவைக்கப்படுவதற்கான சூழ்ச்சியில் தி.முக.வும், அ.தி.மு.க.வும் இறங்கியது. இரண்டு கட்சிகளும் ஒன்றுசேர்ந்து தள்ளிவைக்க வேண்டும் என்று மனு கொடுக்க தேர்தலும் தள்ளிவைக்கப்பட்டது. இதில் தினகரன் ரொம்பவே டென்ஷன். ஏனென்றால் தேர்தலுக்காக பணம் செலவழித்தது அவர் மட்டும்தான். அதனால்தான் ஸ்டாலினை கோழை என்று சொன்னார். அது உண்மை என்பதால் ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் போயிருக்கலாம். அடுத்தடுத்து தினகரனைத் திட்ட, அவர் பதிலுக்குத் திட்ட என்று இப்போது எல்லாமே களேபரம்.

தினகரனின் திருவேற்காடு ரகசியத்தை வெளியிடுவோம் என்று ஸ்டாலின் ஏடான முரசொலியில் வீராவேசம் பேச, பதிலுக்கு நமது எம்.ஜி.ஆரில் தினகரன் ஏறுக்குமாறாக பேசத் தொடங்கிவிட்டார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணத்துக்குக் காரணமானவர்களை சிறைக்கு அனுப்புவோம் என்று ஸ்டாலின் சொல்ல, அதையும் கலாய்க்கத் தொடங்கிவிட்டார் தினகரன். இவர்களது பஞ்சாயத்தைப் பார்த்து அழகிரி கைகொட்டி சிரிக்கிறார். அவர் மட்டுமல்ல, தி.மு.க. தலைவர்கள் அத்தனை பேரும் ஸ்டாலின் நிலைமையைப் பார்த்து வாயைப் பொத்தி சிரிக்கிறார்கள்

அதைவிடுவோம், அது என்ன திருவேற்காடு ரகசியம் என்று கேட்டோம். அதாவது திருவேற்காடு பகுதியில் தினகரனின் அந்தரங்கத் தேவைகளைக் கவனிக்க ஒரு மாமாவும், அவருக்கு ஒரு மகளும் இருக்கிறாராம். அவரைத்தான் அப்படி மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதனால் இப்போது ஸ்டாலினின் குறிஞ்சிமலர் சீரியலைத் தொட்டு இருக்கிறார் தினகரன். அப்போது பாத்திமா பாபுக்கும் ஸ்டாலினுக்கும் நடந்த கசமுசா தமிழகமே அறிந்ததுதான்.

ஆக, தமிழ்நாட்டு மக்களுக்கு இனிமேல் ஒரே ஜாலிதான். அடுத்தடுத்து உங்க ரகசிய சமாச்சாரங்களை எல்லாம் அள்ளி வீசுங்கப்பா..