பிரசவ வலியின் மூன்றாவது நிலை எப்படி இருக்கும்னு புரிஞ்சுக்கோங்க!

இதுதான் பிரசவத்தின் உச்சகட்டம். இந்த நேரத்தில் வலியின் தீவிரம் மிகவும் அதிகமாக இருக்கும் அதாவது வலியானது ஒரு நிமிடம் முதல் இரண்டு நிமிடம் வரை நீடிக்கலாம். மேலும் இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை வலி அடிக்கடி ஏற்படும்.


· இந்த நேரத்தில் கர்ப்பப்பை முழுமையாக திறந்துவிடுவதால் ரத்தப்போக்கு அதிகரிப்பதுடன் கடுமையான வலியை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

· பிரசவ வலி கழுத்து மற்றும் கால்களில் கடுமையான வலி தென்படும்.

· வலியின் தீவிரம் காரணமாக களைப்பு ஏற்படுவதற்கும், எதிர்பாராத வகையில் தூக்கம் வருவதற்கும் வாய்ப்பு உண்டு.

· வலியின் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்படவும் செய்யும். ஏதோ ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்ற அச்சம் கர்ப்பிணியிடம் தென்படும்.

குழந்தை பிறப்பதற்கு தயார் நிலையில் இருக்கிறதா என்பதை மருத்துவர் கையினால் உட்புற பரிசோதனை செய்யும்போது கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம் கர்ப்பப்பை முழுமையாக திறந்துவிட்டதா, குழந்தையின் தலை சரியான நிலையில் உள்ளதா என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.