முட்டை ப்ரியர்களா! அப்போ முட்டை நல்லாயிருக்க கெட்டுப்போய்டுச்சானு பாக்க தெரிஞ்சிக்கோங்க!

முட்டையை வாங்கும்போது நல்ல முட்டையா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.


முட்டையை வாங்கும்போது நல்ல முட்டையா என்பதை பார்த்து வாங்க வேண்டும். நல்ல முட்டையாக பார்த்து வாங்குவது கொஞ்சம் கடினமானது. முட்டை காலாவதியானதா இல்லையா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். முட்டையை வெளிச்சத்திற்கு எதிராக வைக்கவும். உதாரணத்திற்கு மெழுகுவர்த்திக்கு நேராக வைக்கவும். முட்டையின் வட்டமான பகுதியில் காற்று பைகள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அந்த காற்றுப்பை 3.175 மிமீ-க்கு குறைவாக இருந்தால் அந்த முட்டை ப்ரஷானது மற்றும் சாப்பிட ஏற்றது. ஒருவேளை அதைவிட பெரியதாக இருந்தால் அந்த முட்டை சாப்பிட ஏற்றதல்ல.

முட்டை சாப்பிடுவதற்கு ஏற்றதா, ப்ரெஷ்ன முட்டைதானா என்பதை கண்டறியும் எளிய வழி மிதவை சோதனையாகும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் முட்டையை மென்மையாக போடவும். முட்டை அடிமட்டத்தை அடைந்தால் அந்த முட்டை சாப்பிட ஏற்றது. ஆனால் மூழ்காமல் ஒரே ஓரத்தில் மிதந்தால் அந்த முட்டை சாப்பிட ஏற்றதல்ல. அந்த முட்டையை சாப்பிடுவது உங்களுக்கு பல ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதற்கு காரணம் நாள்பட்ட முட்டைகள் ஓடுகளில் காற்று எளிதில் புகுந்து விடும். ஆனால் புதிய முட்டைகளில் காற்று உள்ளே செல்ல அதிக நேரம் எடுப்பதால் அது உடனடியாக மூழ்கிவிடும். இந்த சோதனை நூறு சதவீதம் சரியானதாக இருக்கும்.

முட்டையை சாப்பிட ஏற்றதா என்பதை கண்டறிய செய்யப்பட்ட மிகவும் பழமையான சோதனை இதுவாகும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் முட்டையின் மீது சல்பர் வாசனை வருகிறதா என்பதை முகர்ந்து பார்க்க வேண்டும். ஒருவேளை அதில் எந்த வாசனையும் வரவில்லை என்றால் நீங்கள் அதனை சாப்பிடலாம். வாசனை வராமலும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதனை உடைத்து முகர்ந்து பார்க்கவும். ஒருவேளை அதில் விரும்பத்தகாத வாசனை வந்தால் அந்த முட்டையை தவிர்ப்பது நல்லது.