கலைஞரின் மூத்த மகள் செல்வி மீது கொலை முயற்சி வழக்கு! திடுக்கிட வைக்கும் காரணம்!

அமமுக கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ கட்சியினர் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்ததால், ஏற்பட்ட தகராறு தொடர்பாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மகள் செல்வி மீது கொலை மிரட்டல் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது


திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து நேற்றுமாலை சூளைமேடு பகுதியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது  அமமுக கூட்டணி கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் தெகலான் பாகவியை ஆதரித்து அக்கட்சியை சேர்ந்த ஹசீனா பேகம் மற்றும் ரிஷ்வானா பேகம் ஆகிய இரு பெண்கள் அதே பகுதியில் வாக்கு சேகரிப்பு மேற்கொண்டிருந்தனர்.

வாக்காளர்களின் பட்டியல் வாங்கி டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது. அப்போது செல்வி உட்பட தி மு க வினர் அதை தட்டிக் கேட்டு, இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக வின் 108 ஆவது வட்ட செயலாளர் திருமலை என்பவர் சூளைமேடு காவல் நிலையத்திலும், தேர்தல் அதிகாரிகளிடமும் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் SDPI கட்சியை சேர்ந்த ஹசீனா பேகம் மற்றும் ரிஷ்வானா பேகம் மீது வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது, அவதூறாக பேசுவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேபோல்  எஸ்டிபிஐ கட்சி சார்ந்த ஹசீனா பேகம் அளித்த புகாரின் அடிப்படையில் கலைஞரின் மகள் செல்வி மற்றும் திமுக பிரமுகர் திருமலை ஆகியோர் மீது கொலை மிரட்டல், தகாத வார்த்தைகளால்  பேசுவது உள்ளிட்ட 2 பிரிவுகளில் சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.