டிரம்பின் முன்னாள் இந்திய பார்ட்னர் திருட்டு வழக்கில் கைது! அட, திருடுவது அவருக்கு ஹாபியாம்!

செளலா என்கிற பெயர் அமெரிக்க ஹோட்டல் துறையில் பிரபலம்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தினேஷ் செளலா அவற்றின் உரிமையாளர்.


இவர் அமெரிக்கன் ஐடியா என்கிற பெயரில் கிளீவ்லன்ட் உடபட நான்கு அமெரிக்க நகரங்களில் ஜனாதி பதி டிரம்பின் நிறுவனத்துடன் இனைந்து நடத்தியவர்.

கடந்த ஆண்டுதான் அந்த கூட்டில் இருந்து டிரம்ப் நிறுவனம் விலகியது.தினேஷ் செளலாவுக்கு அமெரிக்காவில் மொத்தம் 17 ஹோட்டல்கள் இருக்கின்றன.

இவர் கடந்த 22 ம் தேதி டென்னசி மாநிலத்தில் உள்ள மெம்ப்பிஸ் நகர விமான நிலையத்தில் வேறு ஒரு வரின் பெட்டியைத் தன் காரில் ஏற்றிக் கொண்டு போகும் போது போலீசாரிடம் பிடிபட்டார்.காரைச் சோதனையிட்ட போது மேலும் ஒரு திருடப்பட்ட பெட்டியும் கண்டுபிடிக்க பட்டதைத் தொடர்ந்து போலீசார் அவரைக் கைது செய்தனர்.

அவரை ஷெல்பி கவுண்டி ஜெயிலுக்கு கொண்டு போனபோது போலீசாருக்கு அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.தினேஷ் செளலா இதற்கு முன்பே 1000டால லிருந்து 10000 டாலர்வரை மதிப்புள்ள லக்கேஜ்களை திருடி முன்பே பிடிபட்டு இருக்கிறார் என்று அந்த ஷெல்பி கவுண்ட்டி போலீஸ் சொல்லி இருக்கிறது.

17 ஹோட்டல்களுக்கு சொந்தக்காரரான மில்லியனர் இப்படிச் சில்லரைத் திருட்டில் ஈடுபட்டது ஏன் தெரியுமா?, அந்த சட்டவிரோதச் செயலைச் செய்யும்போது கிடைக்கும் திரில்லும்,அதிலிருக்கும் அபாயமும் தனக்கு பிடித்திருப்பதால்தான் இத்தகைய வேலைகளில் இறங்குவதாக சொன்னாராம் தினேஷ் செளலா.

அமெரிக்காவாகவே இருந்தாலும் கையில் காசிருக்கும் போது என்ன பயம்,5000 டாலர் ரொக்க ஜாமீனை கட்டி விட்டு அப்படியே வீட்டுக்குப் போய்விட்டார் தினேஷ் செளலா.