போதையில் இருக்கிறார்..! இளம் பெண் உதவியாளருக்கு டிரம்பால் நேர்ந்த விபரீதம்! வெள்ளை மாளிகை பரபரப்பு!

வாஷிங்டன்: எனது குடும்பம் பற்றி விமர்சித்ததால், உதவியாளரை நீக்க நேரிட்டது, என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.


மெடிலீன் வெஸ்டர்ஹோட் என்பவர் அமெரிக்க அதிபர் டிரம்பின் தனிப்பட்ட உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், தற்போது அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக டிரம்ப், ஊடகத்தினருக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதில், ''இது தன்னிச்சையாக நிகழ்ந்த சம்பவம். இதுபற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. மெடிலீன் போதையில் இருப்பதாகவும், எனது குழந்தைகள் செய்த செயலால் விரக்தி அடைந்துவிட்டதாகவும் என்னிடம் கூறினார். இதனால் அவரை பணியில் இருந்து விலக்க நேரிட்டது,'' என்று குறிப்பிட்டுள்ளார்.  

டிரம்ப் அதிபர் பதவிக்கு வந்த நாள் முதலாக, வெஸ்டர்ஹோட் அவரது தனிப்பட்ட உதவியாளராக பணிபுரிந்து வந்தார். அத்துடன், வெள்ளை மாளிகையில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளவராகவும், வலம் வந்த நிலையில், அவரது பணிநீக்கம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.