ட்ரூ காலர்' தகவல்கள் திருட்டு! அதிர்ச்சியில் ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்கள்!

தற்போது ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகமாக உள்ள நிலையில் பல்வேறு நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்களை உருவாக்கி' கூகுள் பிளே ஸ்டோரில் 'இலவசமாக வழங்கி வருகின்றன.


அந்த வரிசையில் ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக வந்த அப்ளிகேஷன் தான் 'ட்ரூ காலர், இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி தனக்கு அழைப்பவர் யார் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதனால் அதிக அளவு ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் இந்த செயலியை தங்களது போன்களில் நிறுவியுள்ளனர். இந்நிலையில் தற்போது 'ட்ரூ காலர்' உள்ள தகவல்கள் திருடு போவதாக செய்தி ஒன்று பரவியுள்ளது. இதைக் கேட்ட 'ட்ரூ காலர்' பயன்பாட்டாளர்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

செல்போன் பயன்பாட்டாளர்களில் 60 முதல் 80% வரை உள்ள மக்கள் அனைவரும் 'ட்ரூ காலர்' அப்ளிகேஷன் தங்களது ஸ்மார்ட்போன்களில் நிறுவியுள்ளனர். முதலில் இந்த செயலி மூலம் தனக்கு தெரியாத அழைப்புகளை மட்டுமே அவர்களது பெயர்களை தெரிந்து கொள்ள இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அந்த நிறுவனமானது அப்ளிகேஷனில் சில மாறுபாடுகளை செய்து அப்டேட் வெளியிட்டுள்ளது.

அதன் மூலம் பண பரிவர்த்தனையும் செய்துகொள்ளும்படி அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த அப்ளிகேஷன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் நபர்களின் தகவல்களை 'ட்ரூ காலர்' நிறுவனம் வேறு ஒரு நிறுவனத்திடம் விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து 'ட்ரூ காலர்' நிறுவனத்திடம் கேட்டபோது அதற்கு நாங்கள் யாருடைய தகவல்களையும் திருடவில்லை எனவும் பயனாளர்களின் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளது எனவும் ட்ரூகாலர் நிறுவனம் தெரிவித்துள்ளது.