தூங்கிக் கொண்டே டிரக் ஓட்டிய டிரைவர்! கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பேருக்கு நேர்ந்த கொடூரம்!

துலே: மகாராஷ்டிராவில் டிரக், பேருந்து நேருக்கு நேராக மோதியதில் 15 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலம், துலே மாவட்டத்தில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. அவுரங்காபாத் நகரில் இருந்து ஷாஹடா நோக்கி சென்ற அரசுப் பேருந்து, நீம்குல் கிராமத்தில் சென்றபோது, எதிரே வந்த டிரக் மீது மோதி, கவிழ்ந்தது.

இரண்டு வாகனங்களும் ஒன்றோடு ஒன்று உருக்குலைந்ததில், பேருந்தில் பயணித்த 35 பேரில், பேருந்து டிரைவர் உள்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், 12 பேர் காயமடைந்தனர். எஞ்சிய நபர்கள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர். டிரக் டிரைவர் தூங்கியதே விபத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.