தி.மு.க. நிர்வாகிகளுக்கும் ஐபேக் ஊழியர்களுக்கும் உச்சகட்டமோதல்.

ஐபேக் நிறுவனம் தி.மு.க.வுக்கு கால் பதித்த காலத்தில் இருந்தே, தி.மு.க.வின் ஐ.டி. விங்கிற்கும் அவர்களுக்கும் மோதல் நடந்துவருகிறது. இதையடுத்து தி.மு.க. மாவட்டச் செயலாளர்களும் ஐபேக் நிர்வாகிகள் மீது கோபத்தைக் காட்டிவருகின்றனர்.


இந்த நிலையில், ஐபேக் நிறுவனத்தினர் எந்த ஒரு காரியத்துக்கும் தி.மு.க நிர்வாகிகளை குற்றம் சாட்டுவது அதிகரித்துவருகிறது என்பதுதான் புகாராகியுள்ளது. 

ஐபேக் நிறுவனம் உள்ளே நுழைந்ததும் சில சர்வே எடுத்துக்கொடுத்தது தவிர வேறு எந்த காரியமும் உருப்படியாக செய்யவில்லை.. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஸ்டாலின், ’’உங்களை ஒப்பந்தம் செய்து மாதக் கணக்கில் ஆகிவிட்டது. இன்னும் உருப்படியாக எதையும் செய்யவில்லையே!’’ என அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

உடனே ஐபேக் டீம், ‘’பல வருடங்கள் ஒரே பதவியில் சொகுசா இருப்பதால் உங்க ஆட்களுக்கு ஒழுங்கா வேலை பார்க்க முடியல. ஒரு சின்ன டீடெயில் கேட்டால் கூட நாள் கணக்கில் இழுத்தடிக்கிறாங்க. துடிப்பான எங்க பாய்சோட வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாததால் பழியை எங்கள் மீது தூக்கி போடறாங்க. அவங்களை சரிப்படுத்த சொல்லுங்க. இல்லாவிட்டால் பின்னாடி எங்களை குறை சொல்லக் கூடாது’’ என்று பதில் சொல்லி இருக்கிறார்கள்.

அதேபோன்று கட்சி நிர்வாகிகளிடம் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஸ்டாலின் கேட்டால், ‘’ஐபேக் நிறுவனத்தினருக்கு வேலை செய்யவே எங்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது’ என்று கொந்தளிக்கிறார்களாம். வேலியில் போனதைக் கொண்டுவந்து வேட்டியில் விட்ட கதையாக விழிக்கிறது தி.மு.க.