சென்னையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் எதிரே வந்த தனியார் பள்ளி பேருந்தில் மோதி சம்பவ இடத்திலே இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஒரே பைக்கில் ட்ரிபிள்ஸ்..! அதிவேகமும் கூட..! 3 கல்லூரி மாணவர்களுக்கு நடுரோட்டில் ஏற்பட்ட பயங்கரம்!
சென்னை தாம்பரம் கேம்ப்ரோடு அருகே உள்ள அகரம் சாலையில் மாணவர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துகொண்டிருந்துள்ளனர். இதையடுத்து மாலை வேளை என்பதால் கூட்டநெரிசல் சற்று அதிகமாகவே இருந்துள்ளது. மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் போக்குவரத்து விதிகளை மீறி வந்துள்ளனர்.
பெருங்குளத்தூரில் உள்ள எஸ் எஸ் எம் தனியார் பள்ளி வாகனம் ஒன்று தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தது இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் வந்ததால் வாகனம் நிலைதடுமாறி எதிரே வந்த பள்ளி வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதையடுத்து பலத்த காயமடைந்த மேலும் ஒரு நபரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.