எதிரே எமனாக வந்த பஸ்..! படுவேகத்தில் மோதிய கோரம்! தாய், மகன், மகள் துடிதுடித்து பலியான சேலம் பரிதாபம்!

சேலம் ஆத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வெள்ளையூர் மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரா. இவர் தனது மகன் மற்றும் மகளுடன் உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். 

அப்போது சேலம் ஆத்தூர் பகுதிக்கு உட்பட்ட விரகனூர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த தனியார் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

இதைக்கண்டு பயந்துபோன பேருந்து ஓட்டுநர், உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்தில் பேருந்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த விபத்து குறித்து கெங்கவல்லி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தப்பிச்சென்ற ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

இறந்த 3 பேரின் உடல்களும் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.