டெல்லி: அனைவருக்குமான இந்தியாவே எனக்குத் தேவை, அதனையே நான் பிரதிநிதித்துவம் செய்ய விரும்புகிறேன், என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்பி நுஸ்ரத் ஜஹான் தெரிவித்துள்ளார்.
நெற்றி வகிடில் குங்குமம்! மதம் மாறிவிட்டாரா முஸ்லீம் நடிகை?

நாடாளுமன்ற கூட்டத்தொடரில், செந்துரப் பொட்டு வைத்து, இந்து பெண்ணை போல தன்னை அலங்காரம் செய்துகொண்டுவருவதன் மூலமாக, திரிணாமூல் காங்கிரஸ் எம்பி நுஸ்ரத் ஜஹான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவர் இஸ்லாம் மதத்தை அவமதித்துவிட்டதாகக்கூறி, முஃப்தி அசாத் காஷ்மி, சமீபத்தில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ஒரு முஸ்லீம் இப்படி செய்யலாமா என அவர் கேள்வி எழுப்பிய நிலையில், இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை நுஸ்ரத் ஜஹான் வெளியிட்டுள்ளார்.
அதில், எனது நடை, உடை, பாவனைகளை வைத்து அரசியல் செய்வதில் துளியும் விருப்பமில்லை. நான் அனைவருக்குமான நபர். இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யவே விரும்புகிறேன். மக்களை மதம், ஜாதி போன்றவற்றின் அடிப்படையில் பிரிப்பது தவறாகும், எனக் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லீமாக இருந்தாலும், கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் நிக்கில் ஜெயின் என்பவரை நுஸ்ரத் ஜஹான் திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.