கஞ்சா வியாபாரியுடன் தகாத உறவு! கட்டிலும் படுக்கையுமாக சிக்கிய பெண் சப் இன்ஸ்பெக்டர்!

திருச்சி: வீட்டிலேயே கஞ்சா வியாபாரியை பதுக்கி வைத்த பெண் போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


திருச்சி போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த புவனேஸ்வரி, திருச்சி பீமநகரில் உள்ள போலீஸ் அதிகாரிகள் குடியிருப்பில் தனி வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், இவரது வீட்டில் கஞ்சா வியாபாரி ஒருவர் ரகசியமாக தங்கியுள்ளார் என்று சக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, புவனேஸ்வரியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்த நபரை பிடித்தனர். 

அந்த நபர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதும், அவரது தம்பியை புவனேஸ்வரி ஏற்கனவே கஞ்சா விற்றதற்காக கைது செய்திருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இருந்தாலும், கஞ்சா வியாபாரியுடன் புவனேஸ்வரி தொடர்பு வைத்திருப்பது தெரியவந்ததும் திருச்சி போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கு என்ன காரணம் என்று தீவிரமாக விசாரணை ஒருபுறம் நடந்து வரும் நிலையில், புவனேஸ்வரியை உடனடியாக சஸ்பெண்ட்  செய்து கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். போலீஸ் குடியிருப்பில் இருந்து அவரை உடனே காலி செய்யவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.