அடித்து தூக்கிய ஜீப்! சாலையில் மூச்சை நிறுத்திய முதியவர்! ஆனால் வாயோடு வாய் வைத்து உயிர் கொடுத்த போலீஸ்காரர்! நெகிழ்ச்சி சம்பவம்!

திருச்சியில் விபத்து ஒன்றில் முதியவர் உயிரிழந்துவிட்டதாக நினைத்த நிலையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காவலர் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.


திருச்சி அருகே வண்ணாங்கோவில் பகுதியில் மனைவி, பேரனுடன் இருசக்கர வாகனத்தில் முதியவர் சென்று கொண்டிருந்தபோது ஜீப் மோதி விபத்துக்குள்ளானது.  

அப்போது முதியவர் மூர்ச்சையாக இருந்ததால் அவர் இறந்து விட்டதாக அனைவரும் நினைத்தனர். ஆனால் அங்கு ரோந்து பணிக்காக சென்றுகொண்டிருந்த ராம்ஜி நகர் காவல் நிலைய காவலர் பிரபு முதியவரின் நாடியை பிடித்துப் பார்க்கிறார். அவருக்கு உயிர் இருப்பதை தெரிந்து கொண்டு உடனடியாக அவருக்கு சுவாசம் அளித்து காப்பாற்றினர். இதை அடுத்து கண்விழித்த முதியவர் எழுந்து உட்கார்ந்தார். இது அங்கிருப்பவர்களால் செல்போனில் படம் பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காவலர் பிரபுவின் முதல் உதவியால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டினர். சேவைமனப்பான்மை கொண்ட காவலர் பிரபு குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகளை தானே மண்ணை நிரப்பி சரிசெய்வதுடன், சக காவலர்களுடன் மரங்களை நட்டும் வளர்த்து வருகிறார்.