காதலிக்கும் போதே உல்லாசம்! கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பம்! ஆண் போலீசால் பெண் போலீசுக்கு நேர்ந்த விபரீதம்!

திருச்சியில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பெண் போலீஸ் தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி கிராப்பட்டி காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜ லட்சுமி. இவர் திருச்சி ஆயுதப்படை பிரிவில் தன் காவலராக பணியாற்றி வருகிறார். 23 வயதான ராஜலட்சுமியை ஊர்க்காவல் படை போலீசார் 26 வயதான சிவகுமார் காதலித்து வந்துள்ளார்.

சிவக்குமாரும் திருச்சி அருகே உள்ள பெட்டவாய்த்தலை சேர்ந்தவர். காதல் மயக்கத்தில் இருவரும் அத்துமீறிய தால் ராஜலட்சுமி கர்ப்பமாகியுள்ளார். தான் கற்பமாக செய்தியை காதலன் சிவக்குமாரிடம் தெரிவித்துள்ளார் ராஜலட்சுமி.

இதனைத் தொடர்ந்து தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜலட்சுமி தனது காதலரான ஊர்க்காவல்படை வீரர் சிவகுமாரை வலியுறுத்தியுள்ளார். ஆனால் சிவக்குமார் திருமணத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கேட்டு சிவக்குமாரிடம் நேற்று இரவு ராஜலட்சுமி சண்டை போட்டதாகவும் அதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் ராஜலட்சுமி தன்னுடைய வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. 

ராஜலட்சுமியின் உறவினர்கள் வீட்டின் கதவை தட்டியபோது திறக்கவில்லை. இதனையடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது ராஜலட்சுமி மயங்கி கிடந்துள்ளார்.

மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்ட ராஜலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாகவும் அவர் அரளி விதையை அரைத்து சாப்பிட்டு உள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். திருமணத்திற்கு முன்பே தேவையில்லாமல் நெருக்கம் காட்டியதால் கர்ப்பம் ஆன நிலையிலும் காதலனும் தன்னை கைவிட்டதால் ராஜலட்சுமி இந்த சோகமான மற்றும் விபரீதமான முடிவை எடுத்துள்ளார்.

ராஜலட்சுமி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து திருச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.