5 வருட காதல்..! பெற்றோரை தவிக்கவிட்டு வேன் டிரைவரை ரகசிய திருமணம் செய்த பெண் டாக்டர்!

திருவெறும்பூர் காவல் நிலையத்தில் திமுக ஒன்றிய மகளிரணி நிர்வாகியின் மகள் காதலனுடன் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


திருவெறும்பூர் ஒன்றிய திமுக மகளிரணி நிர்வாகியாக ராதா புலிகேசி இவரது மகள் காருண்யா (22) இவர் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த வீரமணி (24) என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளார். காருண்யா எம்பிபிஎஸ் இறுதி ஆண்டு படித்து வரும் டாக்டர். வீரமணி வேன் ஓட்டும் டிரைவர்.

இந்த நிலையில் வீரமணி காருண்யா காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கடந்த 1ம் தேதி சமயபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் ராதா புலிகேசி தனது மகள் காருண்யாவை காணவில்லை என புகார் செய்தார் அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் விசாரனை செய்துவந்தனர்.

இந்த நிலையில் வீரமணியும் காருண்யாவும் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார்இருதரப்பினரையும் அழைத்து விசாரித்து விசாரணை செய்தபோது காருண்யா வீரமணி உடன் செல்வதாக கூறியதை தொடர்ந்து இரு தரப்பினரும் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.