செத்த எலியை சாப்பிட்டு தலைகீழாக நின்ற விவசாயிகள்! திருச்சியை திகுதிகுக்க வைத்த போராட்டம்!

திருச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரே இறந்துபோன எலியை வாயில் வைத்து கொண்டு, தலைகீழாக தொங்கிய படி புதுவித போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணுவுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவரான அய்யாக்கண்ணு போராட்டம் நடத்துவதுவதில் புதுப்புது யுக்திகளை கையாண்டு அனைவரின் கவனத்தை திசை திருப்புவார். 

அதற்கு உதாரணம் டெல்லியில் மண்டை ஓடு, மண் சட்டி, தூக்குக் கயிறு உள்ளிட் பொருட்களை வைத்து போராட்டம் நடத்தி தமிழக மக்களை மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து விவசாய பெருமக்களையும் திரும்பி பார்க்க வைத்தவர் அய்யா கண்ணு. போராட்டத்தின்போது வாயில் பாம்புக்கறி, எலிக்கறியை வைத்துக் கூட புது முயற்சியில் ஈடுபட்டார்.

அந்த வகையில் மேட்டூரில் இருந்து விவசாயத்திற்கு 20,000 கனஅடி தண்ணீர் திறந்து விடவேண்டும் என்றும் ஏரி மற்றும் குளங்கள் வாய்க்கால்கள் உடனடியாக தூர்வாரி கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்றும் திருச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரே விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தினார்.

அப்போது விவசாயிகள் ஒருசிலர் தங்கள் வாயில் எலிக்கறியை வைத்து கொண்டது மட்டும் அல்லாமல் சில விவசாயிகள் தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சில விவசாயிகள் கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலைக்கு முயல்வது போல் போராட்டம் நடத்தினர். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் விவசாயிகள் பிரச்சனைகளுக்கு எப்போது நிரந்தர தீர்வு கிடைக்குமோ என்று கூறியபடியே போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது போல் சென்றனர்.