நேருக்கு நேர் மோதிய கார்கள்..! கால்கள் சிதைந்த தவியாய் தவித்த நபர்..! 108 ஆம்புலன்ஸ் இல்லை..! களம் இறங்கிய நெகிழ வைத்த போலீஸ்கார்!

திருச்சி: விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராகச் சென்ற காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.


முசிறியை அடுத்த புளியவலசு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி சாந்தி மற்றும் மகள் பிரியதர்ஷினி (14 வயது). இவர்கள்,  பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணியம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு, டிசம்பர் 26ம் தேதி , மாருதி ஆம்னி வேனில் வீடு திரும்பினர். அப்போது, மூலனூர் அருகே உள்ள புளியம்பட்டி பிரிவில் எதிரே அதிவேகமாக வந்த கார் ஒன்று, அவர்களின் மாருதி வேன் மீது மோதியது. இதில், காரை ஓட்டிய தியாகராஜன் பலத்த காயமடைந்தார்.

வேன் நசுங்கியதால், அவரின் கால் உள்ளே சிக்கிக் கொண்டு, அதனை வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கூறப்பட்டது. ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதானதால், தனியார் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தரப்பட்டது. இதனை காவலர் பணிபுரியும் கணேஷ் என்பவர் நேரடியாக, டிரைவருக்குப் பதிலாக, விரைவாக எடுத்துச் சென்று, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, 24 கிமீ தொலைவில் உள்ள தாராபுரம் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதித்தார்.  

குறிப்பிட்ட தனியார் ஆம்புலன்ஸ்க்கு டிரைவர் இல்லாததால், அதனை தானே முன்னின்று செய்ததாக, போலீஸ் கணேஷ் குறிப்பிடுகிறார். அதேசமயம், அவர் போலீஸ்தான் என்பது, காயம்பட்டவர்களுக்கு தெரியாது. காயம்பட்டவரின் வேதனையை பார்த்து, அரசு ஆம்புலன்ஸ் தாமதம் ஆனதால், நேரடியாக, தனியார் ஆம்புலன்சை தேடிச் சென்று, தானே ஓட்டிச் சென்று, காயம்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்த, கணேஷ்க்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.