திருச்சி PNB வங்கியில் 470 சவரன்! ஒவ்வொன்றாக வெளியாகும் எய்ட்ஸ் முருகனின் கைவரிசை!

லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் சிக்கிய முருகன் தலைமையிலான கும்பல், சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 470 சவரன் நகை கொள்ளையடித்தது என்று திருச்சி எஸ்.பி. ஜியாவுல் ஹக் தெரிவித்துள்ளார்.


கடந்த ஜனவரி மாதம், திருச்சி சமயபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 470 சவரன் நகைகள் மற்றும் 19 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையில் வங்கியின் சுவரில் துளை போட்டு லாக்கர்களை வெல்டிங் வைத்து உடைத்து கொள்ளையர்களை நகைகளை திருடி சென்றுள்ளனர். 

 பஞ்சாப் நேஷனல் வங்கியின் கொள்ளை வழக்கில் காவல்துறையினர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மேலும், நான்கு தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. இருப்பினும் துப்பு கிடைக்காமல் காவல் துறையினர் திணறிய நிலையில்தான், லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் சிக்கிய முருகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனிப்படைகள் விசாரணையை மீண்டும் மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்தது கும்பல் முருகன் தலைமையிலானது என்றும், அந்தக் கும்பலைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவனை, திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு கொள்ளைகள் மட்டுமின்றி இவர்களின் கும்பல் கைவரிசை தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், கேஸ் கட்டர் எனவும், வங்கியின் லாக்கர்களை உடைத்தது கொள்ளை அடித்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட கணேசனின் உறவினர் என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும், வங்கிக் கொள்ளைக்கு தேவையான உபகரணங்களை மதுரை சென்று ராதாகிருஷ்ணனும், கணேசனும் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

பின்னர், இவர்களை நீதிமன்றத்தில் அளித்து சென்று, காவலில் எடுத்து கொள்ளை அடிக்கப்பட்ட 470 சவரன் நகை மற்றும் 19 லட்சம் ரூபாய் ரொக்கம் என்ன ஆனது என்பது குறித்தும் விசாரிக்க உள்ளதாக காவதுறையினர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.