பப்பில் முழு போதை! இளம் நடிகையுடன் சேர்ந்து பிரபல நடிகரின் மகள் போட்ட கெட்ட ஆட்டம்! வைரல் வீடியோ!

நடிகர் ஷாரூக் கானின் மகள் சுஹானா கான், நடிகர் சங்கி பாண்டேயின் மகள் அனன்யா பாண்டே ஆகியோர் கிளப் ஒன்றில் ஆடிய நடனம் இணைய தளத்தை கலக்கி வருகிறது.


சுஹானா கான், அனன்யா பாண்டே மற்றும் சஞ்சய் கபூரின் மகள் ஷனாயா கபூர் ஆகியோர் இளம் வயது தோழிகள், அண்மைக்காலங்களில் இவர்கள் மூவரும் இணைந்து வெளியிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணைதளத்தை கலக்கி வருகின்றன.

அந்த வரிசையில் சுஹானா கான், அனன்யா பாண்டே ஆகியோர் கிளப் ஒன்றில் ஆடிய நடனம் தொடரபான வீடியோ இணையதளத்தை கலக்கி வருகிறது. இருவரும் நடனமாடிய காட்சியை  ஷனாயா கபூர் படப் பதிவு செய்ய அதனை அனன்யா பாண்டே சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

அண்மையில் அனன்யா தங்கள் மூவரையும் சேர்த்து ஷாருக்கான் எடுத்த இரண்டு புகைப்படங்களை டிவிட்டரில் சார்லி’ஸ் ஏஞ்சல்ஸ் என்ற பெயரில் பகிர்ந்திருந்தார். ஏற்கனவே ஸ்டூடண் ஆஃப்தி இயர் 2வில் நடித்த அனன்யா தற்போது பதி பத்னி அவுர் வோ என்ற படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார்.

தற்போது இங்கிலாந்து கல்லூரியில் படித்து வரும் சுஹானா கான் தானும் அடுத்து நடிப்புத் துறைக்கு ஆர்வம் காட்டி வருகிறார். ஷானாயா விளம்பர மாடல் துறையில் களமிறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. https://www.instagram.com/p/Bz2-j2mghCs/