கிண்டல் பண்ணி சிரிச்சாங்க..! இப்போ கைதட்டி பாராட்டுறாங்க..! திருநங்கை சம்யுக்தாவின் வெற்றிக் கதை!

மூன்றாம் பாலினத்தவர்கள், மாற்றுத் திறனாளிகள், கறுப்பா இருப்பவர்கள், குண்டாக இருப்பவர்கள், திருநங்கைகளை எப்போதுமே வித்தியாசமாக பார்க்கும் சமூகத்தில் முன்னேறி சாதித்துக் காட்டியுள்ளார் திருநங்கை சம்யுக்தா. பொள்ளாச்சியை பூர்வீகமாக கொண்ட சம்யுக்தா அடிப்படையில் வறுமையான குடும்பத்தில் இருந்து வந்தவர்.


பொறியியல் கலய்தாய்வில் 100வது இடத்தை பிடித்த சம்யுக்தா கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பு படித்தார். 

தான் திருநங்கை என்பதால் பலரும் அவரை கிண்டல் செய்ய நல்ல நிலைக்கு உயர்ந்து வரவேண்டும் அது நன்றாக படித்தால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்த சம்யுக்தா நன்றாக படித்து அமேசான் நிறுவனத்தின் பெங்களூரு கிளைகயில் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிந்து வந்தார்.

2010-ம் ஆண்டு ஐரோப்பிய கண்டத்திலுள்ள லக்சம்பர்க் நாட்டிலுள்ள அமேசான் நிறுவனக் கிளைக்கு பணிமாற்றம் வாங்கிட்டு போய் பணிபுரிந்தார். அங்கே மூன்றாம் பாலினத்தவர்களுக்கென பிரத்யேகக் குழுக்கள் இருந்ததால் தான் பெண்ணாகவே மாறி மாறி அவருக்கு பிடித்தது போல் வாழத் தொடங்கினார். பிறகு காப்பீடு திட்டத்தின் மூலம் அறுசை சிகிச்சை செய்து திருநங்கையாகவே மாறிவிட்டார் சம்யுக்தா.

திருநங்கைகள் படிப்பறிவு இல்லாதபோதுதான் பலரும் கிண்டல் செய்கிறார்கள். ஆனால் நன்றாக படித்து நல்ல நிலைமைக்கு உயர்ந்து விட்டால் அனைவரும் பாராட்டத் தொடங்குவார்கள் என்றும் அதற்கு நானே உதாரணம் எனவும் பெருமை கொள்கிறார் திருநங்கை சம்யுக்தா.

ஆணாக அல்லது பெண்ணாக அல்லது மூன்றாம் பாலினத்தவராக தங்களுக்குப் பிடித்த பெயரில் செயல்பட அனைவருக்கும் உரிமை உள்ளது எனக் கூறும் சம்யுக்தா, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர் களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அப்போதுதான் மூன்றாம் பாலினத்தவர் பல்வேறு உயர் பொறுப்புகளுக்கு முன்னேற முடியும். என்கிறார் சம்யுக்தா