ஐந்து ஆண்களிடம் சிக்கிய திருநங்கைக்கு அதிகாலையில் நடந்த விபரீதம்! அச்சச்சோ பரிதாபம்!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று அதிகாலை நெடுஞ்சாலை ஓரத்தில் திருநங்கை ஒருவர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.


இதைப்பார்த்த பொதுமக்கள் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை அப்புறப்படுத்திவிட்டு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று அதிகாலை 5 மணி அளவில் விழுப்புரம் - சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முத்தாம்பாளையம் கிராமம் அருகே திருநங்கை ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.

அதைப் அந்த வழியில் நடந்து சென்ற மக்கள் பார்த்துள்ளனர் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்த தொடங்கினார்.

விசாரணையில் அவர் விழுப்புரம் ஐயன்கோவில்பட்டு கிராமத்தில் வசித்துவரும் அபிராமி என்கிற அன்பு (36 ) திருநங்கை என்பது தெரியவந்தது. பின்னர் இறந்த அவரது உடலை  பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் அபிராமியின் தோழிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அதிகாலையில் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது ஒரு காரில் வந்த ஐந்து நபர்கள் திடீரென தங்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்று நிலையில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் அபிராமியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக அவரது தோழிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காரில் இருந்த நபர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக தேடி வருகின்றனர்.