திருநங்கை சாமியாரிடம் பிரம்படி வாங்கியது ஏன்? அதிர்ச்சி தகவலை வீடியோவாக வெளியிட்ட இளம் பெண்!

தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாத காரணத்தால் தனக்கு பேய் பிடித்துள்ளதாக பொய் சொன்னேன். அதனால்தான் தனக்கு அடி கிடைத்தது. மன்னித்து விடுங்கள் என ஒரு பெண் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.


சேலம் சுற்றுவட்டாரத்தில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் பேய் பிடித்திருப்பதாக கூறி ஒரு திருநங்கை சாமியார் மதுரா என்பவர் அடிப்பது வலி தாங்க முடியாமல் பெண் கதறும் வீடியோ உள்ளது.  

சேலம் கன்னங்குறிச்சியில் காளியம்மன் கோயிலில் அமாவசை, பவுர்ணமி நாட்களில் திருநங்கை சாமியார் ஒருவர் அருள்வாக்கு சொல்வது வழக்கம். இது மட்டுமின்றி பகுதிநேரமாக அங்கு பேய் விரட்டும் வேலையையும் பார்த்து வருகிறார்.

இந்நிலையில், இளம்பெண் ஒருவரை இவரிடம் அழைத்து வந்து பேய் பிடித்திருப்பதாக உறவினர்கள் கூறுகின்றனர். உடனே அந்த திருநங்கை சாமியார் முன் பெண் அமரவைக்கப்படுகிறாள். நீ எந்த ஊரு பேய்? உன்பெயர் என்ன?" என கேட்க அந்த பெண் தன் பெயரை சொல்கிறார். இதையடுத்து தன்னுடைய கையில் இருந்த பிரம்பால் அந்த பெண்ணை போட்டு அடிக்கிறார்.

ஒருவழியாக அடி தாங்க முடியாமல் அந்த பெண்ணும், தனக்கு பேய் பிடித்திருப்பதை ஒத்துக்கொள்கிறார். பின்னர் திருநங்கை சாமியார் பேயை விரட்ட வேண்டும் எனக்கூறி பிரம்பால் மீண்டும் வெளுத்து வாங்க, வலியை பொறுக்க முடியாமல் அய்யோ என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு பேய் பிடிக்கவில்லை. பொய் சொன்னேன் என கூறுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கை ஏன் பொய் சொன்னாய் என்று மீண்டும் அடித்து துவைக்கிறார்.

பின்னர் அந்த பெண் நான் ஒருவரை காதலிக்கிறேன். எனது விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதனால்தான் பேய் பிடித்திருப்பதாக பொய்சொன்னேன் என்று கதையை முடிக்கிறார். பின்னர் அந்த திருநங்கை காதலனை மறந்து விடுவேன் என சத்தியம் செய் என மீண்டும் மிரட்டுகிறார்.

இதற்கிடையே திருநங்கையிடம் அடிவாங்கிய பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாத காரணத்தால் தனக்கு பேய் பிடித்துள்ளதாக பொய் சொன்னேன். அதனால்தான் தனக்கு அடி கிடைத்தது. மன்னித்து விடுங்கள் என பேசுகிறார்.