பெண் ஆண் ஆனார்! ஆண் பெண் ஆனார்! திருநங்கையை காதலித்து திருமணம் செய்து திருநம்பி!

கேரளாவில் குடும்பங்களால் கைவிடப்பட்ட தன்னம்பிக்கையுடன் முன்னேறிய திருநங்கையர் இருவர்,திருமணம் செய்து கொண்டு தனது காதல் வாழ்வை துவங்கியுள்ளனர்.


கேரள மாநிலத்தை சேர்ந்த  திருப்தி தனது 6 ஆவது வயதில் அவரது உடல் ரீதியான மாற்றங்களை உணர்ந்துள்ளார் அவரது வீட்டில் யாரும் அவரை புரிந்துகொள்ளாமல் காயப்படுத்த வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார் பின்னர் தன்னை போன்ற பிற திருநங்கையிடம் பழக கூடிய வாய்ப்பு கிடைத்து அவர்களுடன் இணைந்து  தனக்கான வாய்ப்புகளுக்காக தொடர்ந்து கடினமாக உழைத்த திருப்பதி.

சொந்தமாக ஹேண்ட்கிராஃப்ட் தொழில் துவங்கி, கைவினைப் பொருள்கள், ஆடைகளை விற்பனை செய்கிறார் மேலும்  கேரளாவின் முதல் திருநங்கை தொழில்முனைவோர் என்கிற பட்டத்தை வாங்கியுள்ளார். இதுதவிர, நிறையப் பள்ளி, கல்லூரிகளுக்கு தன்னம்பிக்கை பேச்சாளராகவும் போவதுண்டு அப்படி தான்  ஹிரித்திக் அறிமுகமாகுகிறார்.

தொடர்ந்து பழகிவந்த ஹிர்த்திக் திருப்தியுடன் காதல் கொள்ள அதை வெளிபடுத்தியுள்ளார். தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த திருப்தி ஒருக்கட்டத்தில் ஹ்ரித்திக் தன்னைப்போலவே குடும்பத்தாரால் ஒதுக்கபட்ட ஆணாக மாறியவர் என தெரிய வந்ததும் அவர் திருமணத்திற்கு ஒப்பு கொள்கிறார்.

திருமணத்தை இருவரது ஆசைப்படி கோவிலில் நடத்தியுள்ளனர்.   திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த பலரும்,நடிகர் ஜெயசூரியா, இயக்குநர் ரஞ்சித் சங்கர்னு திரைத்துறை சார்ந்த நண்பர்களும் வந்து வாழ்த்தியுள்ளனர். ஹிரித்திக்- திருப்பதி தம்பதியினரின் அடுத்தகட்டமாக இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கவுள்ளதாகவும் , நிறைய படிக்க ஆசைப்பட்ட எங்களுக்கு கிடைக்காத கல்வி வாய்ப்புகளை அவர்களுக்கு கொடுப்போம் என பூரித்தனர்.