சேனல்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க ட்ராய்க்கு உரிமை இருக்கிறதா..? நீதிமன்றம் கேள்வி

தொலைக்காட்சி சேனல்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கவும், ஒழுங்குபடுத்தவும் டிராய் அமைப்பு செயல்பட்டு வருகிறது.


டிராய்க்கு அப்படிப்பட்ட அதிகாரம் வழங்கும் சட்டப் பிரிவை ரத்து செய்ய கோரி சன் தொலைக்காட்சி குழுமம் சார்பில் சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. இது குறித்து டிராய் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஒரு தொலைக்காட்சி சேனலை 19 ரூபாய் கட்டணத்தை தாண்டி நுகர்வோருக்கு விற்பனை செய்யக்கூடாது என்ற விதியை டிராய் அமைப்பு கொண்டு வந்தது. இந்த விதிகளை எதிர்த்து தொலைக்காட்சி நிறுவனங்கள் தொடங்க வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதன்பிறகு மீண்டும் ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி,சேனல் ஒன்றின் அதிகபட்ச கட்டணம் 19 ரூபாயில் இருந்து 12 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராகத்தான் சன் குழுமம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதில்தான் டிராய்க்கு பதில் வழங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இப்படி ஒரு வழக்கு மும்பையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சன் குழுமமும் நீதிமன்றம் சென்றுள்ளது.