சாலை விதிகளை மீறினால்..! சென்னை கத்திப்பாராவில் சப் இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த பயங்கரம்! வைரல் வீடியோ!

சென்னை: சென்னையில் இன்று குடியரசுத்தலைவர் வருகையால் நந்தம்பாக்கத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது அதில் பலரும் கலந்து கொண்டனர்.


அந்த கூட்டத்தில் பங்கேற்ற போக்குவரத்து துறை உதவி ஆய்வாளர் கத்திபாரா மேம்பாலத்தில் செல்லும் போது எதிரே வந்த லாரி ஒன்று அவரது வாகனத்தின் மீது மோதியது இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே போக்குவரத்து உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் நிலவியது.

சென்னையில் தாம்பரம் சானிடோரியம் துர்கா நகரில் வசித்து வந்தவர் நடராஜ் 56, இவர் சென்னை பரங்கிமலை போக்குவரத்து துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். சென்னையில் இன்று குடியரசுத் தலைவர் வருகையால் ஒரு சிறப்புக் கூட்டம் காலையில் நடந்தது அதில் பங்கேற்ற போக்குவரத்து துறை உதவி ஆய்வாளர் கூட்டம் முடிந்து சுமார் 11 30 மணியளவில் வீட்டிற்கு கிளம்பியுள்ளார்.

அப்போது கத்திபாரா மேம்பாலத்தில் வந்து கொண்டிருக்கும் போது அதே திசையில் சிமெண்ட் லாரி ஒன்று வந்துள்ளது இந்நிலையில் அந்த லாரி ஒரு ஆட்டோவை முந்தி இடதுபுறம் நோக்கி வந்துள்ளது அப்போது நடராஜ் வந்த இருசக்கர வாகனத்தின் மீது லாரி பலமாக மோதியுள்ளது.இந்நிலையில் வாகனம் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார் நடராஜ் அப்போது லாரியின் சக்கரம் அவரது மேல் ஏறிச்சென்றுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து  நடராஜ் உயிரிழந்தார்.

 இந்நிலையில் அப்பகுதியில் கூட்டம் கூடியது இதையடுத்து சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் லாரி ஓட்டுநர் சதீஷ் என்பவரை கைது செய்தனர் அவர் மீது விபத்து ஏற்படுத்தியது மற்றும் கொலை குற்றப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர் மற்றும் நட்ராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் பார்த்தபோது போக்குவரத்து காவலர் தனது வாகனத்தில் ஹெல்மெட்டை வைத்துக் கொண்டு அவர் தலையில் போடாமல் வெறும் தொப்பி மட்டுமே போட்டு வந்துள்ளதை பார்த்துள்ளனர். அப்போது அவர் ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹெல்மெட் அணியாததுடன் இடதுபுறம் வளைவு உள்ள நிலையில் பின்னால் வாகனங்கள் வருகிறதா என்பதை கவனிக்காமல் நட்ராஜ் சென்றுள்ளார். இதே போல் லாரி டிரைவரும் வளைவில் திரும்பும் போது வேகத்தை குறைக்கவில்லை. இந்த இரண்டும் தான் விபத்திற்கு காரணமாகியுள்ளது.