இடி மின்னலுடன் கொட்டிய கனமழை! கடமையே பெரிது என போலீஸ்காரர் செய்த செயல்! குவியும் பாராட்டு!

ஒரு துளி மழை பெய்தாலே குடையை தேடும் சில காவலர்களுக்கு மத்தியில் கொட்டும் மழையை பொருட்படுத்தாது போக்குவரத்து நெரிசலை செரி செய்யும் பணியில் ஒரு காவலர் ஈடுபட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது, திருச்சி, சேலம், விருதுநகர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அத்த 48 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளனர். 

இந்நிலையில் நேற்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

மழை நேரத்தில் அருப்புக்கோட்டை அருகே எம்.எஸ்.கார்னர் சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் செல்வகுமார் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பணியில் ஈடுபட்டார். மழை காரணமாக வாகனங்கள் தேங்கி நெரிசலில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக மழையை துச்சமென மதித்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

எம்.எஸ்.கார்னர் சந்திப்பு என்பது அதிக வாகனங்கள் செல்லும் சாலைகளில் ஒன்று என்பதால் போக்குவரத்து காவலர் செல்வகுமார் மேற்கொண்ட இந்த பணியை அப்பகுதி மக்கள் பாராட்டினர். இந்த காட்சிகளை செல்போனில் படம்பிடித்த அப்பகுதி இளைஞர்கள் அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர்.

வீடியோவை பார்த்த பலர் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை அவரது பணி ஈடுபாட்டை காவல் தலைமை பார்த்து பணி உயர்வு வழங்கினாலும் ஆச்சரியப்படுத்துவதற்கு இல்லை.