ஹெல்மெட் அணியாமல் வந்து தகராறு! ஒரே செயலில் வாயை அடைத்த சபாஷ் போலீஸ்!

சென்னையில் சொந்த காசில் டீ பிஸ்கட் வாங்கி கொடுத்து ஹெல்மட் அணிய வலியுறுத்தும் காவல் ஆய்வாளர்.


சென்னையில் ஹெல்மட் அணியாதவர்களை மடக்கிப்பிடிக்கும் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்ட நபரிடம் கோவம் கொள்ளாமல் சாதுரியாமாக பதில் அளித்த காவல் ஆய்வாளர் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து ஆங்காங்கே போலீசார், ஹெல்மெட் அணியாதவர்களை மடக்கி பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அப்போது போலிசாருடன் வாக்கு வாதத்தில் அங்கிருந்த நபர் ஈடுபட,போக்கு வரத்து ஆய்வாளர் மணாளன், மிக சாதுரியமாக கையாண்டார்.

போலீசார் தரப்பில் மிக அன்புடன், சொந்த காசில், டீ பிஸ்கட் வாங்கி கொடுத்து உங்கள் நலனுக்காக தானே சொல்கிறோம் என்றவர். இதுவரை நடந்த விபத்துகளின் புகைப்படத்தை காட்டி உங்களுக்கக ஹெல் மட் அணிய வலியுறுத்துகிறோம் என அவர் பேசிய தோரணை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.