ரயில் கட்டணத்தை திடீரென உயர்த்தியது ஏன்? மோடிக்கு டி.ஆர்.பாலு கேள்வி!

மோடி, அமித் ஷா ஆகியோரை நாடாளுமன்றத்தில் சந்திக்கும்போது, சிரித்துமழுப்பி, பொன்னாடை போர்த்துவது தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்கம். ஆனால், அறிக்கையில் மட்டும் எதிர்த்துப் பேசுவார்கள்.


அந்த வகையில் மத்திய அரசு யாரும் எதிர்பாராத நேரத்தில் ரயில் கட்டணத்தை உயர்த்தியிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று தி.மு.க.வின் டி.ஆர். பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இன்னும் ஒருமாத காலத்தில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வெளியிட உள்ள நிலையில் திடீரென்று ரயில் கட்டணத்தை உயர்த்திருப்பது நிதிநிலை அறிக்கையில் மேலும் பெரிய அளவில் கட்டண உயர்வு இருக்குமோ? என்ற ஐயப்பாட்டை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது.

ரயில் பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்தாமலும், தமிழக மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் பல்வேறு ரயில்வே திட்டங்களை நிறைவேற்றாமலும் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணித்து வரும் நிலையில் ரயில் கட்டணத்தை உயர்த்தியிருப்பது வேதனைக்குரியதாகும். 

எனவே, மத்திய அரசு சாமானிய மக்கள் பயணத்துக்கு ஏற்றதான ரயில் கட்டணங்களின் உயர்வைத் திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துவதோடு, நிதிநிலை அறிக்கைக்கு முன் ரயில் கட்டண உயர்வை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.