மராட்டியத்தில் பட்னாவிஸ் அரசு தப்புமா? நாளை காலை உச்சநீதிமன்றம் வைக்கப் போகும் ட்விஸ்ட்!

அவசரம் அவசரமாக மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை எடுத்துவிட்டு, ஜனநாயகத்தின் பக்கம் நிற்பது போன்று கவர்னர் வித்தியாசமான நடவடிக்கை மேற்கொண்டதைப் பார்த்து உலகமே சிரிக்கிறது.


அதனால், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் பதவியேற்புக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று காலை 11.30க்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

மத்திய அரசு, மகாராஷ்டிர மாநில அரசு, தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் இந்த வழக்கில் எதிர் மனு தாரர்களாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சய் கண்ணா ஆகியோர் 11.30 மணியளவில் உச்ச நீதிமன்றத்துக்கு வந்தார்கள்.

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பிந்தையக் கூட்டணி உருவாக்கப்பட்டு, உத்தவ் தாக்கரே விரைவில் பதவி ஏற்க உள்ளார். அதனை உடைப்பதற்காகவே போதிய எண்ணிக்கை இலலாமல் தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றுள்ளார் என்று மூத்த வழக்கறினர் கபில்சிபல் கூறினார்.ஆட்சி ஏற்றுவிட்டதால் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், கவர்னரின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை என்று பா.ஜக. தரப்பு வழக்கறிஞர் முகில் ரோகித் கூறினார். ஆட்சி அமைக்கப்பட்டு விட்டது என்றும், கவர்னர் உத்தரவில் தலையிடுவதற்கு நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என்றும் வாதாடினார்கள்.

மத்திய அரசு வழக்கறிஞரும் இந்த கேஸை தள்ளுபடி செய்யவேண்டும் என்றுதான் பேசினார்கள். இவர்களுடைய வாதங்களைக் கேட்டுக்கொண்டநீதிபதி, நாளை அதாவது திங்கள் காலை 10 மணிக்கு ஒத்திவைத்துள்ளார். நாளைக்குத் தெரிந்துவிடும் ஜெயிக்கப்போவது அமித்ஷாவின் வியூகமா அல்லது ஜனநாயகமா என்பது.