நாளை வங்கியில் வேலை நிறுத்தமாம்! உஷார் மக்களே! பணத்தை எடுத்து பத்திரமா வைச்சுக்கோங்க!

நாடு கடுமையான பொருளாதார மந்த நிலையை நோக்கி செல்வதாக சொல்லப்படும் நேரத்தில், அதனை சரிக்கட்டும் வகையில் வங்கிகளை ஒன்றிணைக்கும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.


இந்த விவகாரத்துக்கு வங்கி ஊழியர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக வங்கிகளின் எண்ணிக்கையையும், அதைத் தொடர்ந்து ஊழியர்கள் எண்ணிக்கையும் குறையும். இதனால் மேலும் பல்வேறு சிக்கல்கள் விளையும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. 

அதனால் மத்திய அரசின் வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய வங்கி ஊழியர்கள் முடிவு எடுத்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்திற்கு அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகிய இரண்டும் அழைப்பு வெளியிட்டுள்ளன. 

இது ஒரு நாள் வேலை நிறுத்தம் என்றாலும், இந்த வாரம் முழுவதும் இந்தப் பாதிப்பு இருக்கும் என்றே கருதப்படுகிறது. அதனால் பணம் வேண்டும் என்று நினைப்பவர்கள், இன்றே ஏடிஎம்.களில் இருந்து எடுத்துக்கொள்ளுங்கள்.