திருமணம் ஆகாமலேயே வயிற்றை தள்ளிக் கொண்டு வந்து நின்ற நடிகை..! வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அடைந்த அதிர்ச்சி!

தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகையாக வலம்வரும் சோபிதா துலிபாலா , தான் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.


தெலுங்கு பெண்ணான சோபிதா துலிபாலா , தெலுங்கு திரையுலகில் புலனாய்வு திரில்லர் நாடகம் குடாச்சாரி மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். அதில் ஆதிவி சேஷுடன் இணைந்து நடித்திருந்தார். சமீபத்தில் நடிகை சோபிதா துலிபாலா நெட்ஃபிக்ஸ் ஆந்தாலஜி திரைப்படமான கோஸ்ட் ஸ்டோரீஸில் நடித்திருந்தார். 

 அதில் அவர் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் பாத்திரத்தை வேடத்தில் நடித்திருந்தார். தற்போது அந்த வெப்சீரிசை விளம்பரப்படுத்துவதற்காக இந்த குழுவினர் வேலை பார்த்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக நடிகை சோபிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். 

 

நடிகை சோபிதா துலிபாலா இளம் வயதிலேயே இத்தகைய கடினமான கதாபாத்திரத்தை எடுத்து நடித்து தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிக்காட்டி இருக்கிறார். இவர் ஏற்கனவே தான் நடித்த படங்களில் தன் நடிப்புத் திறமையை காட்டி ரசிகர்கள் மத்தியில் கைதட்டல்களை பெற்றவராவார். எப்போதும்போல, ஒரு ஆச்சரியமான நம்பகமான நடிகையாக வலம் வந்துள்ளார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

கோஸ்ட் ஸ்டோரிஸில் ஜான்வி கபூர், அவினாஷ் திவாரி, குல்ஷன் தேவையா, சுகந்த் கோயல், குஷா கபிலா, விஜய் வர்மா, பவாய் குலாட்டி ஆகியோரும் நடிக்கின்றனர். தற்போது நடிகை சோபிதா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ஆனது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இளம் நடிகையான சோபிதா திருமணமாகாமலேயே கர்ப்பமாக இருக்கிறாரா? என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.