வெயில் கொளுத்துனாலும் இந்த ஊர்களில் மழை பெய்யும்

தென் கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது


தென் கடலோர ஒட்டியுள்ள  பகுதிகளில் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதால் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

தென் கடலோர பகுதி தவிர்த்து இதர பகுதிகளில் வரண்ட வானிலை  நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

உள் மாவட்டங்களில் வேலூர் திருவண்ணாமலை கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் நாமக்கல் பெரம்பலூர் திருச்சி கரூர் திண்டுக்கல் மதுரை திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பு விட 2 இருந்து 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக காணப்படும் என்றும்

கடந்த 24 மனி நேரத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

சென்னை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது