மூன்றாம் கலைஞர் உதயநிதிக்கு நேற்று முடிசூட்டுவிழா ஏன் தெரியுமா? ராஜமாதா துர்காவின் கட்டளை!

மூன்றாம் கலைஞர் என்று உடன்பிறப்புகளால் செல்லமாக அழைக்கப்படும் உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று மதியம் 3 மணிக்கு முடிசூட்டுவிழா நடந்ததற்குப் பின்னே மாபெரும் பகுத்தறிவு இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஆம், அவரது ராசிப்படி இன்று மிகவும் நல்ல நாள். ஏனென்றால் இன்று வியாழக்கிழமை பஞ்சாங்கத்தில் ஆனி மாதத்தின் சந்திர தரிசன நாளாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். 

ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.

இந்த மூன்றாம் பிறையை பார்க்க மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இன்றைய தினத்தில் தொடங்கும் எந்த ஒரு விஷயமும் நன்மையில் முடியும் என்பது ஐதீகம். அதனால்தான் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டதாம். ஆனால், உதயநிதிக்கு பதவி வழங்கப்பட்ட அறிவிப்பில் அன்பழகனின் கையெழுத்து இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அன்பழகனுக்கு விருப்பமில்லையா அல்லது கையெழுத்து போடும் அளவுக்கு உடல் நலம் சரியில்லையா என்பது தெரியவில்லை.