இன்றைய IPL போட்டிகளின் சுவாரஸ்யமான விவரங்கள் இதோ!

இன்று ipl ல் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது.


இந்த இரு அணிகளும் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளிகளை பெற்றுள்ளது. இதனால் இந்த இரு அணிகளும் தங்களது இரண்டாவது வெற்றியை அடைய இன்று தங்களது முழுபலத்துடன் களமிறங்கவுள்ளது.


இன்று 8 மணிக்கு தொடங்கவுள்ள மற்றொரு போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தாங்கள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.


டெல்லி கேபிட்டல்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் உள்ளது. இளம் வீரர்கள கொண்ட டெல்லி கேபிட்டல்ஸ் அணி அனுபவம் வாய்ந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்வது சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.