டி.என்.பி.எஸ்.சி. புதிய தேர்ச்சிப் பட்டியல் வெளியீடு..! கேஸை ஊத்தி மூட என்ன அவசரங்கோ இப்போ?

குரூப் 4 தேர்வில் கன்னாபின்னா முறைகேடு என்று தினம் ஒரு செய்தி இறக்கை கட்டி பறக்கிறது.


இடைத்தரகர் ஜெயகுமாரைக் காணவில்லை என்று நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், சட்டென்று இந்தப் பிரச்னையை ஊத்தி மூடும் வகையில், புதிய தேர்ச்சிப் பட்டியலை அறிவிப்பு செய்துள்ளது டி.என்.பி.எஸ்.சி. முதல் 39 இடம் பிடித்தவர்கள் மட்டுமே ஊழலில் ஈடுபட்டவர்கள் என்று எப்படி முடிவுக்கு வந்ததோ தெரியவில்லை, அவர்களைத் தவிர மற்றவர்களுக்குப் பதவியைக் கொடுத்து புதிய தேர்ச்சிப் பட்டியல் வெளிவந்துவிட்டது.

இதுகுறித்துப் பேசும் டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள், ‘‘இந்த பிரச்னையை இன்னும் பெரிதாகாமல் தடுப்பதற்கு அரசு ஆசைப்படுகிறது. அதனால்தான், சட்டுப்புட்டு என்று புதிய தேர்ச்சிப் பட்டியல் வெளியாகியுள்ளது. ஒளிந்துகொண்டிருக்கும் ஜெயகுமார், சித்தாண்டி போன்றவர்களைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்தில் சி.பி.சி.ஐ.டி இல்லை.

ஏனென்றால், அவர்கள் இருவரையும் பிடித்துவிட்டால், டி.என்.பி.எஸ்.சி. உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வரை ஊழல் பட்டியல் நீளும் என்று சொல்லப்படுகிறது. அதனால், இந்த விவகாரத்தை அமுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.

படிச்சவன் மோசடி செஞ்சான் அய்யோன்னு போவான் என்று சொல்லி ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.