ரவுடி கொடூர கொலை! வெட்டி மூளையை தட்டில் வைத்துச் சென்ற பயங்கரம்! சென்னை திகுதிகு!

திருவல்லிக்கேணியில் ரவுடியாக சுற்றித்திரிந்த ஒருவனை மற்றொரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள மாட்டாங்குப்பத்தில் சரவணன் என்பவரின் மகனான அறி என்கிற அறிவழகன் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு ரவுடியா சுற்றித்திரிந்து வருகிறான். இவன் மீது அருகில் உள்ள காவல் நிலையத்தில் பல குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. 

இந்நிலையில் நேற்று அவனது வீட்டில் நள்ளிரவு 11 மணி அளவில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், மற்றொரு கும்பல் வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக அரிவாளால் அறியை வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் துடித்த அறிவழகன் அதே இடத்திலேயே உயிரிழந்துள்ளான். 

இதைக்கண்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அலறியடித்துக் கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இச்சம்பவம் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அறியின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் அறியை வெட்ட வந்த கும்பல் எப்படி இருப்பர் என்பது குறித்து குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த மற்றொரு ரவுடியான பல்பு குமாரை வெட்டி கொலை வழக்கில் அறிவுக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதற்கு பழி தீர்க்க தற்போது பல்பு குமாரின் கும்பல் இதனை செய்திருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.