தனது கள்ளக்காதலனுடன் மகளையும் உல்லாசம் அனுபவிக்கச் சொன்ன தாய்..! பிறகு அரங்கேறிய பதைபதைக்க வைக்கும் சம்பவம்! திருப்பூர் திகுதிகு!

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் கணவர் இல்லாமல் வறுமையில் வாடிவந்த சகாயராணி என்பவர் பாக்கியராஜ் என்பவரின் அடைக்கலத்தில் வாழ்ந்து வந்தார்.


இவரது மகள் எஸ்தர் பேபி கருத்து வேறுபாடு காரணமாக 2014ம் ஆண்டு கணவரை பிரிந்துவிட்டார். இவருக்கு 4 குழந்தைகள். கணவரை பிரிந்த எஸ்தர் பேபி தாய் வீட்டில் வசித்து வந்தார். ஆனால் அங்கு பாக்கியராஜ் என்பவருடன் தாய் வாழ்ந்து வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் வேறு வழியின்றி 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் எஸ்தர் பேபியுடனும் முறையற்ற வாழ்வு வாழ ஆசைப்பட்டுள்ளார் பாக்கியராஜ். இதற்கு உடந்தையாக தாய் சகாயராணியும் இருந்துள்ளார். 

ஆனால் இதற்கு எஸ்தர் பேபி சம்மதிக்கவில்லை. மேலும் தாயுடன் பாக்கியராஜ் வைத்திருந்த உறவுபற்றி வெளியில் சொல்லிவிடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் அடிக்கடி தாய், மகள் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சகாயராணி மகளை அடித்துக் கொன்று வீட்டிற்கு பின்பக்கத்திலேயே புதைத்து விட்டார். பின்னர் மகள் காணாமல் போய்விட்டதாக போலிசில் புகார் அளித்துள்ளார் சகாயராணி. இதற்கிடையே மார்ச் மாதம் சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் கொலை வழக்கு ஒன்றில் சேவியர் அருண் என்பவர் கைதானார்.

இவரை பிடித்து விசாரித்ததில் 6 வருடங்களுக்கு முன்னர் எஸ்தர் பேபி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து எஸ்தர் பேபியின் தந்தை தனது சந்தேகத்தை எழுப்ப போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தில் பேபி கொலை வழக்கு தொடர்பாக சேவியர் அருண், சகாயராணி, பாக்கியராஜ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.