டைம்ஸ் தமிழ் 2019 டிஜிட்டல் விருதுகள். பரிதாபங்களுக்கும் எரும சனிக்கும் போட்டி

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக டைம்ஸ் தமிழ் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.


இந்த ஆண்டு முதல் டிஜிட்டல் விருதுகளை அறிவிப்பதில் டைஸ் தமிழ் பெருமைப்படுகிறது. 2019ம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை சீரிஸ் எதுவென பார்க்கலாம்.

அன்றாட அரசியல் முதல் சினிமா வரை அத்தனை விவகாரங்களையும் அலசியெடுத்து விமர்சனம் செய்யும் வகையில் கலாய்ப்பது பரிதாபங்கள் என்றால் எருமசனி குடும்ப விவகாரத்திலும் இறங்கி கலாய்க்கிறது.

இரண்டுமே காமெடியில் அடித்துத் தூக்குகின்றன என்றாலும், சட்டென சிரிப்பு வருவதற்கு பரிதாபங்கள் அத்தனை கேரண்டி கொடுக்கிறது. கடுப்பாக இருக்கும் நேரங்களில், பரிதாபங்கள் எபிசோடுகளை நம்பிப் பார்த்து சிரிக்கலாம். அதேபோன்று தைரியமாக அரசியல் விமர்சனம் செய்வதிலும் பரிதாபங்களே சூப்பர்

ஆகவே, டைம்ஸ் தமிழ் 2019 டிஜிட்டல் நகைச்சுவை சீரிஸ் விருதை தட்டிச்செல்கிறது பரிதாபங்கள் குரூப். மேலும் மேலும் நகைச்சுவையால் வளர வாழ்த்துகிறது டைம்ஸ் தமிழ்.