டைம்ஸ் தமிழ் 2019 டிஜிட்டல் விருதுகள். விருது வாங்குவது அராத்து பூர்ணிமா ரவியா அல்லது பவி டீச்சரா..?

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக டைம்ஸ் தமிழ் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.


இந்த ஆண்டு முதல் டிஜிட்டல் விருதுகளை அறிவிப்பதில் டைஸ் தமிழ் பெருமைப்படுகிறது. 2019ம் ஆண்டின் சிறந்த டிஜிட்டல் நடிகை யாரென பார்க்கலாம்.

டி.வி. சீரியல்கள் என்றால் அழுகை அழுகையாக நடிகைகளை பார்த்து வருகிறோம். அந்த சீட்டுக் கட்டை உடைத்துவிட்டு தன்னுடைய அசால்ட் நடிப்பின் மூலம் யூடியூப் உலகை கலக்கியிருப்பவர், பூர்ணிமா ரவி. அப்படி சொன்னால் தெரியுமோ என்னமோ அராத்து என்றால் எளிதில் புரிந்துகொள்ளலாம். தனியொருத்தியாக ஷோவை தூக்கி நிறுத்தும் தனித்தன்மை பூர்ணிமாவிடம் இருக்கிறது. மனோரமா, கோவை சரளா போன்ற வரிசையில் வரும் அளவுக்குத் திறமை தெரிகிறது.

அராத்துக்கு செம ஃபைட் கொடுப்பவர் என்றால் பவி டீச்சர். ஆஹா கல்யாணம் மூலம் வந்தவர் தன்னுடைய கண்களாலே நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை பிடித்து வைத்திருக்கிறார். பிரேமம் மலர் டீச்சருக்கு அடுத்தபடியாக இந்த பவி டீச்சருக்குத்தான் தமிழ் ரசிகர்கள் அடிமை என்றே சொல்லலாம். இப்போது சினிமாவிற்குள்ளும் அடியெடுத்து வைத்திருக்கிறார் பவி.

இவர்கள் இருவரும் வெவ்வேறு திசையில் பயணித்தாலும், அழுகாச்சியைவிட, மக்களை சிரிக்க வைப்பதுதான் கடினாம். ஆகவே, இந்த ஆண்டு டைம்ஸ் தமிழ் சிறந்த டிஜிட்டல் நடிகை விருதை அள்ளிச் செல்கிறார் பூர்ணிமா ரவி என்ற அராத்து.